ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்;பாஜக உத்தரவு;டெல்லி போலீசார் தடியடி!-மாணவர்கள் காயம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற  பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. உலக பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்தான்.

மத்தியில் பாஜக கட்சி ஆட்சியை பிடித்ததிலிருந்து கடந்த ஆறு வருடங்களாக பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் திரைமறைவு வேலை செய்கிற ஆட்களை மெதுவாக பணியில் அமர்த்தியது பாஜக கட்சி.  பிறகு சிறிது, சிறிதாக மாணவர்கள் அமைப்பிலும் அவர்களுடைய கருத்துக்களை பரப்பி பல்கலைக்ழகத்தில்ABVB என்னும் மாணவர் அமைப்பை நிலை நிறுத்தி மாணவர்களிடையே பூசல்களை உருவாக்கியது. சிறுபான்மை  மதத்தை சேர்ந்த  மாணவர்கள் பழிவாங்கப்பட்டார்கள்.அதன் தொடர்ச்சியாக  சமீபத்தில் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிக்கான கட்டணத்தை உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல்  உடை கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு போன்ற பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்தியது. 

இந்த புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேஎன்யூ மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.  ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்றுவந்த போராட்டத்திற்கு அடிபணிந்த பல்கலைகழக நிர்வாகம் விடுதி கட்டணத்தை பேருக்கு சற்று குறைத்து உத்தரவு பிறப்பித்தது.

கட்டண உயர்வால் ஏழை,எளிய மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படும், உயர்த்திய கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்யவேண்டும், புதிதாக நடைமுறப்படுத்தப்பட்டுள்ள உடை கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு விதிமுறைகளை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்காததால் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. இந்தக் கட்டண உயர்வின் விளைவாக 40 சத மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாமல் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று மாணவர்கள் கூறுகிறார்கள்

பாரளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஜேஎன்யூ மாணவர்கள் 500-க்கும் அதிகமானோர் இன்று காலை பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். 

பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களை சஃப்தர் ஜங் கோபுரம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனடியாக அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைகழதத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.     

மேலிடத்து உத்தரவு படி மாணவர்களை அப்புறப்படுத்துகிறோம் என்று  போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.மாணவ மாணவிகளை கண்மூடித்தனமாக போலீசார் தாக்கினர்.பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்,சில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

மாணவர்களைப் போக்குவரத்திற்கு வழிவிடச் சொல்லி வேண்டிக் கொண்ட ஆசிரியரை “நீதாண்டா தூண்டிவிட்டாய்’ என உதைத்து மிதித்து,. பார்வையற்ற மாணவரைத் தாக்கி மயக்கமடையச் செய்தது டெல்லி போலீஸ்,மாணவிகளை குறிவைத்து விரட்டி, விரட்டி தாக்கியது போலீஸ்

மாணவர்கள் போராட்டம் தொடர்வதால் லோக் கல்யான் பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவெங்கும் மாணவர் போராட்டத்தைக் கொண்டு செல்ல மற்ற மாணவர் அமைப்புகளுடன் பேசிவருகிறார்கள் மாணவர்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top