ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை; ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்களை விற்று ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


நாட்டின் பொருளாதாரம் மிகவும் அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது என்று நாட்டின் மீது அக்கறை உள்ள எதிர்கட்சிகள் கூறிவந்தன.பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்தனர். எதைப் பற்றியும் கவலை படாமல் நம் நாட்டு பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

பாஜக கட்சியோ  பொருளாதாரத்தை பற்றி பேசியவர்களை மிரட்டி வந்தது.இன்னும் ஒரு படி மேலே நாட்டின் பொருளாதார வீழ்சியை தினம் தோறும் ட்விட் போட்டுக்கொண்டிருந்த முன்னால் நிதி மந்திரி ப சிதம்பரத்தை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி உள்ளே தூக்கி போட்டு விட்டார்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசு


இப்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்தநிலையில் நஷ்டத்தில் இயங்கி வருகிற பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவில் மத்திய அரசு இருக்கிறது.என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார்

அந்த வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இவ்விரு நிறுவனங்களையும் மார்ச் மாதத்துக்குள் விற்பனை செய்து முடித்து விட முடியும் என கருதுகிறோம்” என குறிப்பிட்டார். ஏர் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், தற்போது அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிற சாதகமான சூழ்நிலை உள்ளது எனவும் அவர் கூறினார்.


இந்த இரு நிறுவனங்களையும் விற்று ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டி விட முடியும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

“பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டுகிற வகையில், அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பல துறைகள் இப்போது நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றன” என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

சில குறிப்பிட்ட துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டிருப்பதையும், பொருளாதார மந்த நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி, மீண்டும் சரக்கு, சேவை வரி வசூல் சூடு பிடிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பொருளாதார வளர்ச்சிவீதம்) 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளதாக தர நிர்ணயம் செய்கிற பல்வேறு நிறுவனங்கள் கூறினாலும்கூட, இந்திய பொருளாதாரம் அதில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு சூடு பிடிக்கத்தொடங்கும் என நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களையும் மூடிவிட்டு அவைகளை அம்பானிக்கும் அதானிக்கும் தாரை வார்க்க பாஜக முயலுகிறது, நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள். எதிர்த்து பேசுபவர்களை நீதித்துறை மூலமே தண்டிக்கிற அளவிற்கு எல்லா அரசு நிர்வாகத்தையும் சீரழித்து வைத்திருக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top