ஐஐடி மாணவி பாத்திமா மரணம்; வழக்கில் பேரா. சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேருக்கு சம்மன்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பான  வழக்கில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலை அல்ல, கொலை என்று சொல்லப்படுகிறது. சாட்சியங்கள் வேறு அழிக்கப்பட்டிருக்கிறது.குற்றவாளியான பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் கைது செய்யப்படவில்லை இது குறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என சந்தேகப்படுபவர்களை உடனடியாக கைது செய்வது வழக்கம்.ஆனால் இந்த வழக்கில் சந்தேகப்படும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்  உயர்ஜாதி வகுப்பை சேர்ந்தவர் என்பதாலும் அவர் இந்து மத ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உயர்மட்ட உறுப்பினர் என்பதாலும் அவரை கைது செய்ய காவல்துறை தயக்கம் காட்டுகிறது என செய்திகள் வருகிறது   

ஐஐடி மாணவி பாத்திமா மரணம்  தேசமெங்கும் பரவலாக பேசப்படுவதால்  காவல்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது ஆகையால், முதல் கட்டமாக  இது தொடர்பாக ஐஐடி கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்தது.

அதன்படி மாணவி பாத்திமா மரண  வழக்கு தொடர்பாக பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.இதில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மட்டுமே குற்றவாளி மற்ற இருவரும் இந்த வழக்கில் ஜோடிக்கப்பட்டவர்கள். இந்த வழக்கை திசை மாற்ற திட்டமிட்டு ஐஐடி நிர்வாகம் இவர்கள் இருவரையும் சேர்த்து விட்டிருக்கிறது என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top