ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் –அதிகாரிகளின் ஒப்புதலோடு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் மத்திய அரசு!

உலக நாடுகளில் இந்தியா ஒரு  சிறப்பு மிக்க நாடு ஏனென்றால், இந்தியா  என்பதே அதன் பன்முகக் கலாச்சாரமும் ,பல தேசிய இனங்களின் கூட்டமைப்பும் ஜனநாயகத்தன்மையும்தான். அதை மத்தியில் ஆளும் பாஜக குழி தோண்டி புதைக்க  பார்க்கிறது அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சிறப்புத் தன்மையை அழித்து நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது  அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என அமல்படுத்துவதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார்.கிட்டத்தட்ட மன்னர் ஆட்சி போன்று ஒரு நிலையை ஏற்படுத்த மோடி முயன்று வருவது தெரிகிறது

இந்த நிலையில் நாட்டில் உள்ள அமைப்பு ரீதியிலான பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிற ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் வழங்கச்செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு அதிரடியாக இறங்கி உள்ளது.


தனியார் பாதுகாப்பு துறையின் மத்திய சங்கம் சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பாதுகாப்பு தலைமை உச்சி மாநாட்டில் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் தங்கள் சம்பளத்தைப் பெறுவதை உறுதி செய்கிற விதத்தில் ஒரே சம்பள நாள் இருக்க வேண்டும். இதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளார்” என குறிப்பிட்டார்.

இதே போன்று தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற விதத்தில், ஒரே சீரான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு எண்ணி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது தொடங்கி பல்வேறு தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் பணியாற்றி வந்துள்ளதாகவும் சந்தோஷ் கங்குவார் குறிப்பிட்டார்.  அவர் குறிப்பிடுகையில், சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக 44 சிக்கலான தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

[தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வந்து தொழிற்சங்கங்களை முடக்கிய கதைகள் வேறு என்பது குறிப்பிடத்தக்கது]


‘தனியார் பாதுகாப்பு துறையானது, வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு அளித்து வருவதாக அவர் பாராட்டினார். தற்போது இந்த துறையில் 90 லட்சம் பேர் பணியாற்றுவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் இது 2 கோடியை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.வருங்காலத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடி விட்டு தனியாரிடம் கொடுக்க மோடி அரசு திட்டமிட்டு இருக்கிறது தெளிவாக தெரிகிறது

தொடர்ந்து சந்தோஷ் கங்குவார் பேசுகையில், “அமைப்பு சாரா தொழில் துறையில் பணியாற்றுகிறவர்கள், மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்வதில் பிரதமர் மோடி ஆர்வம் கொண்டுள்ளார். தொழிலாளர் துறைக்காக பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம்” என்று கூறினார்.அதாவது அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது.லாபத்தில் இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்ப்பது. முதலில் அவர்கள் நாடுமுழுதும் அனைவருக்கும் ‘ஒரே சம்பள நாள்’ என்று மக்களை ஏமாற்ற துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தங்களுக்கான ஆட்களை ஏற்கனவே நியமித்து விட்டார்கள் பாஜக-ஆர்.எஸ்.எஸ்சின்  கொள்கைகளை நிறைவேற்ற மத்திய அரசிற்கு ஆதரவாக அதிகாரிகள்  பேசுகிறார்கள்.மக்கள் வரி பணத்தில் சலுகைகளையும் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு மக்கள் விரோத கருத்துக்களை அரசு கருத்தாக வெளியிடுகிறார்கள்.   

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா சமீபத்தில் கூறி இருப்பதுவே இதற்கு சாட்சி


தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசும் போது “பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன்மொழிந்து அதை செயல்படுத்துவதில் விருப்பம் கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிறபோது அது பல்லாயிரம் கோடி பணத்தை மிச்சப்படுத்தும். நேரம் வீணாவது தடுக்கப்படும். அரசு அதிகாரிகள், ஊழியர்கள், போலீஸ் படையினரை அடிக்கடி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதை தடுத்து மக்கள் பணியில் ஈடுபடுத்த முடியும்.


அதே நேரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல. தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது” என்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகேயுள்ள கோட்டாவில் அமைந்துள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசும்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பற்றி குறிப்பிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், “அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்தாலன்றி ஒரே நேரத்தில் தேர்தல் அல்லது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிக விரைவில் நடந்து விடாது” என்று குறிப்பிட்டார்.

இது போன்ற ஒரு ஏற்பாட்டை செய்வதற்கு முன்னுரிமை அளிப்போம் என்று சொல்வதைத் தவிர இதில் தேர்தல் கமிஷன் கூடுதலாக செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “இது அதிகார வர்க்கத்தின் அறிக்கை அல்ல. நாங்கள் கொள்கை அளவில் ஒப்புக்கொள்கிறோம். எப்படி இருப்பினும். இதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து பேசி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியப்படும்” என கூறினார்.

நமது நாட்டில் 1967-ம் ஆண்டு வரையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாகவும் அவர் கோடிட்டுக்காட்டினார். இடையில் சில மாநில சட்டசபைகள் கலைக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடைமுறையை தொடர முடியாமல் போய்விட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆக, பாஜக நியமித்துள்ள அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் இனி ஒரே நாடு கொள்கைகளை பேசுவார்கள். மக்கள் இயக்கங்கள் இதை எதிர்க்கவேண்டும் காங்கிரஸ் தூங்கிக்கொண்டு இருக்கிறது.மற்ற கட்சிகள் எல்லாம் இந்த நாட்டின் மக்களை காக்க ஒன்றிணைய வேண்டும்.இந்த நாட்டை காப்பற்ற வேறு வழி இல்லை

குழகன்  கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top