வருகிற 19ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி நடக்க இருக்கிறது .

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 19ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  நாளை இரவு அவர் சென்னை திரும்புகிறார்.  இந்த கூட்டத்தில் அவரும் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது

இக்கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.அனேகமாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம். உச்ச நீதிமன்றம் மிகவும் கண்டித்து இருப்பதால் இனியும் தள்ளிப் போடமுடியாது . 

உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த படி உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top