உலக பாரா தடகள போட்டி; தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்க வென்றார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்க வென்றார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டித் தொடரில்,  உயரம் தாண்டுதல் ஆடவர் பிரிவில்,  இந்தியாவின் சரத்குமார் வெள்ளிப்பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கத்தையும் வென்றனர். 

ஆசியன் பாரா விளையாட்டு தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சரத்குமார் 1.83 மீட்டர்   உயரம் தாண்டி, வெள்ளி பதக்கத்தை தட்டிச்சென்றார். அதேபோல், 1.80 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்றார். பதக்கம் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டித்தொடரில் கலந்து கொள்ள இரு வீரர்களும் தகுதி பெற்றனர். ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தைச்சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றது நினைவிருக்கலாம். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதலில், 1.86 மீட்டர் உயரம் தாண்டிய சாம் கிரிவ் தங்கப்பதக்கம் வென்றார். 

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் பதக்கப் பட்டியலில் தற்போது வரை சீனா முதலிடம் வகிக்கிறது. 23 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 53 பதக்கங்களை சீனா வென்றுள்ளது.  இரண்டாவது இடத்தில் 37 பதக்கங்களுடன் பிரேசிலும், 24 பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top