ராமர்கோயில் கட்ட இந்து அமைப்புக்குள் சண்டை! பல கோடி வசூலித்த ‘விஎச்பி’; கோவில் பூசாரி புகார்!

பாபர் மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்ததும் வந்தது இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தன்மையும் மதச்சார்பற்ற தன்மையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கபட்டுக் கொண்டிருக்கிறது.

சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாக தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் இந்துக்கள்,அவர்களுக்காக மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறது இந்துத்துவ அமைப்புகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை நிறுவ வேண்டும் அந்த அறக்கட்டளைதான் கோவிலை கட்டும். ஆகையால், கோவிலைக் கட்டும் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது .

அந்த அதிகாரத்தை கைப்பற்ற மத்திய அரசை சுற்றி இருக்கும் பல இந்துத்துவ அமைப்புகள் போட்டி போடுகின்றன. ஒழுங்காக சாமியை கும்பிட்டுக் கொண்டிருக்கும் சாதாரண ஆட்கள் தங்கள் வேலை உண்டு சாமி உண்டு என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்

மத்தியில் ஆளும் பாஜகவின் தோழமை அமைப்பான விஎச்பி, ராமஜென்ம பூமி அறக்கட்டளையை கடந்த 1985-ம் ஆண்டு நிறுவியது. அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதிலும் இருந்து பல கோடி ரூபாய் வசூல் செய்தது. டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் அயோத்தியின் கரசேவக்புரம் எனும் பகுதியில் ஒரு பணிமனை அமைத்து கோயிலுக்கான சிற்பத் தூண்களையும் வடித்து வந்தது. அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இப்பணி மனை சட்டவிரோதமானது என எவரும் வழக்கு தொடுக்காததால் தாமே உகந்த அமைப்பு எனக் கூறி, கோயில் பணியை தமது அறக்கட்டளையிடம் அளிக்க வேண்டும் நாங்கள்தான் உண்மையான இந்துத்துவ அமைப்பு என இப்போது சொல்லிக்கொண்டு மத்திய அரசை கேள்விக் கேட்க ஆரம்பித்து விட்டது

இது ஒரு புறம் இருக்க,  ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவரான நிருத்திய கோபால்தாஸ் கூறும்போது, ‘‘புதிதாக ஒரு அறக் கட்டளை நிறுவுவதால், பணத்துடன் அரசு அதிகாரிகளின் உழைப்பும் வீணாகும். இப்பணிக்காக 34 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ள என் தலைமையில் உள்ள அறக்கட்டளையே போதுமானது. பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவிக் காலத்திலேயே கோயிலைக் கட்டிவிட விரும்புகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

“அறக்கட்டளை எனும் பெயரில் அயோத்தியில் ஒரு அமைப்பு பல வருடங்களாக ஊழல் செய்து வருகிறது. ராமரின் பெயரில் பல கோடிகள் வசூல் செய்துவிட்டு இப்போது கோயில் கட்ட விரும்புவது சரியல்ல’’ என்று ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சார்யா சத்யேந்தர்தாஸ் வருத்தத்துடன் கூறுகிறார்

ராமர் கோவிலுக்கு பின்னால் இப்படியான பல போலி அமைப்புகள் உண்டு இதையெல்லாம் உச்சநீதிமன்றம் தன் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.ஆகையால்தான் தீர்ப்பு ஒருதலைபட்சமாக இருக்கிறது.என்று சமூகநலவாதிகள் கூறுகிறார்கள்
கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top