கோவையில் சாதி ஒழிப்பு மாநாடு;நீலச்சட்டை பேரணி ஆலோசனைக் கூட்டம் தலைவர்கள் பங்கேற்பு

மதமும் சாதியும் மக்களை பிரித்து சமூக ஒற்றுமையை சீரழித்துக்கொண்டிருக்கிற சூழலை மாற்ற, மீண்டும் மக்களிடம் பெரியாரிய சித்தாந்தத்தை எடுத்து செல்லவும் சாதி ,மத பிரிவினைக்கு முற்று புள்ளி வைக்கவும் கடந்த ஆண்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திருச்சியில் மிகப்பெரிய கருஞ்சட்டை பேரணியும் மாநாடும் நடத்தினார்கள்.அந்த கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்இந்த ஆண்டு கோவையில் நீலச்சட்டை பேரணியை நடத்த திட்டமிடல் கூட்டம் நேற்று கோவையில் நடந்தது    

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று 11-11-2019 நடைபெற்றது.

இதில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்றனர்.

தமிழக மக்கள் முன்னணி தலைவர் தோழர் பொழிலன்,திவிக தலைவர் குளத்தூர் மணி ,தபெதிக தலைவர் இராமகிருஷ்ணன் , மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ஆதித் தமிழர் பேரவை தலைவர் தோழர் அதியமான்.தமிழர் விடியல்  கட்சி தலைவர் தோழர் டைசன் ,  விடுதலைத் தமிழ் புலிகள் கட்சி தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் தோழர்  நாகை திருவள்ளுவன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துக்கொண்டன

கோவையில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன

            கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top