நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு “வாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய்விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2012ல் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்றது.அப்போழுதே இருவரும் மீண்டும் இணைந்து படம் செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து இவ்விருவரும் இணைந்து உருவாக்கவிருக்கும் படத்திற்கான வேலைகள் இம்மாத ஆரம்பத்தில் துவங்கின. இந்நிலையில், இப்படதிற்கு “வாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இது குறித்து அதிகாரப் பூர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிப்பிரவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top