இந்தியா, பாகிஸ்தான்; கர்தார்பூர் பாதை திறப்பு – ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பாராட்டு

இந்தியா, பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது.

இதற்காக சீக்கிய பக்தர்கள், சென்று வருவதற்கு வசதியாக இரு நாடுகளுக்கு இடையே, 3 கி.மீ., தூரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன.

பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீக்கியர்கள் புனித யாத்திரை செல்ல அமைக்கப்பட்ட பாதை முறைப்படி திறக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கர்தார்பூர் வழித்தடம் எனும் பெயரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய எல்லை வழி திறக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தின்போது எல்லை தாண்டி கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top