தெலுங்கானாவில் நிலத்தகராறு நீதி கிடைக்காததால் பெண் தாசில்தார் எரித்துக்கொலை

தெலுங்கானாவில் நிலத்தகராறில் நீதி கிடைக்காததால் கோபமடைந்த சாதாரண கிராமத்து ஆள் பெண் தாசில்தாரை எரித்துக்கொலை செய்தார்  

பெண் தாசில்தார் எரித்துக்கொலை செய்யப்பட்டத்தில் இருந்து அச்சத்தில் ஆந்திராவில் கயிறு கட்டி பின்னால் நின்று தாசில்தார்கள் மனு வாங்குகிறார்கள்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற  பெண், தாசில்தார் அவர் அலுவலகத்திலேயே தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா அதிகாரிகளிடம் ஒருவித அச்சம் நிலவி வருகிறது.

ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள தாசில்தார் உமா மகேஸ்வரியை சந்திக்கவரும்  கிராமவாசிகள், அவரது அறையில் போடப்பட்ட கயிற்றின் பின்னால் இருந்து  சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தங்கள் மனுவை அளிக்க  விரும்புவோர்  பாதுகாப்பான தூரத்திலிருந்து ஒப்படைக்க இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விஜயா ரெட்டியின் கொலைக்குப் பிறகு நான் அச்சம் அடைந்து உள்ளேன் என  உமாமகேஸ்வரி கூறி உள்ளார்.

அரசு அதிகாரிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உருவாக்கி விட்டது.எல்லா அரசு அலுவலகத்திலும் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை  அப்படியே, லஞ்சம் கொடுத்தாலும் உடனடியாக நடப்பதில்லை என மக்கள் குறை சொல்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை ,வேலை சரியாக செய்யாத அதிகாரிகளை கேள்விக் கேட்டால் கடுமையாக  கோபப்பட்டு அரசு ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்ததாக புகார் செய்து சாதாரண மக்களை உள்ளே தள்ளி விடுகிறார்கள்

இதெல்லாம் சாதாரண மக்களை இது போன்ற குற்றங்கள்  செய்ய தூண்டி விடும் என்று மனநிலை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.ஆக ,கயிறு கட்டி பாதுகாப்போடு மனு வாங்கினாலும் அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யும் மனநிலை படைத்தவர்களாக இருக்கவேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top