எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

இந்தியா சுதந்திரமடைந்த பின்பு ஏற்பட்ட ஆட்சிகளில் கடந்த ஆறுகால ஆண்டு ஆட்சியான பாஜக ஆட்சியில்தான் வரலாறு காணாத பொருளாதாரப் பின்னடைவும் வேலையில்லா தின்னாட்டமும் ஏற்பட்டிருக்கிறது.இது குறித்து ஆளும் பாஜக அரசுக்கு எந்தவிதமான கவலையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. புதிய புதிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் தங்களது மிருகபல எண்ணிக்கையால் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்  

இந்த சூழலில் எதிர்கட்சிகள் தங்களது சிறு, சிறு மாச்சரியங்களை கடந்து ஒன்று கூடி விவாதித்து  இருக்கிறார்கள்.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள், பாங்காக் நகரில் நடக்கும் பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவுப் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி விவாதித்தனர்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 5.5 சதவீதமாகக் குறைந்தது. வேலையின்மை அதிகரிப்பு, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து விற்பனைக் குறைவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமல்லாமல் தொழில்துறை, கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய 8 துறைகள் சரிவைச் சந்தித்து வருவது போன்ற பொருளாதார மந்தநிலையை தேசம் எதிர்கொண்டு வருகிறது.

பொருளாதார மந்தநிலை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அவ்வாறு ஏதும் இல்லை என்று மத்திய அரசு கூறிவருகிறது. இந்தப் பொருளாதார மந்தநிலை, பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் பிற்பகலில் கூடி விவாதித்தனர் . வரும் 18-ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார் . மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஏஐயுடிஎப், திமுக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

இந்தக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை எழுப்பி எவ்வாறு மத்திய அரசிடம் பதில் பெறுவது, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் மத்திய அரசை எவ்வாறு திணறவைப்பது, பாங்காக்கில் நடைபெறும் பிராந்தியக் கூட்டுறவு பொருளாதாரப் பேச்சுவார்த்தையில் இந்தியா கையொப்பம் இடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே 5-ம் தேதி  முதல் 15-ம் தேதி வரை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசின் பொருளாதாரத் தவறுகள், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த இருக்கிறது.

,


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top