சிறை நிர்வாகம் கொடுமை;வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்

சிறை நிர்வாகம் கொடுமைப் படுத்துவதாக வேலூர் ஜெயிலில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஆகிய 2 பேரும் தொடர்ந்து நேற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிரபராதிகளான முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் திடீரென செல்போன் சிக்கியதாக சொல்லப்பட்டது.அவர் மேல் இருபத்தொன்பது வருடமாக எந்தவிதமான புகாரும் இல்லாததால் இது ஜோடிக்கப்பட்ட பொய் என்று சொல்கிறார்கள்  இதன் தொடர்ச்சியாக அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

இந்நிலையில், ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இன்று 8-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் 16-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

2 பேரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உண்ணாவிரதத்தை கைவிட அவர்கள் மறுத்து விட்டனர். முருகன்- நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top