பாஜக வுக்கு எதிரான கருத்துக்கள் பயங்கரவாதமா?கோவை, நாகூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தத்துவார்த்த ரீதியில் தொடர்ந்து போராடும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே! ஆர்.எஸ்.எஸ் கொள்கையை  தமிழ்நாட்டில் பரவச்செய்ய வேண்டும் என கடுமையாக முயற்சி செய்து பார்க்கிறது பாஜக.இதன் அடிப்படையில் சிறுபான்மையினர் மீது கடுமையான நெருக்கடியை திணிக்கிறது பாஜக அரசு.இந்த அரசுக்கு எதிராக கருத்து சொன்னால் அது பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுகிறது  

அதன் நீட்சியாக, தமிழகத்தில் கோவை மற்றும் நாகூரில் இன்று என்ஐஏ அதிகாரிகள் திடீரென முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுதல், பயங்கரவாத கருத்துக்களை பரப்புதல், பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக சொல்லப்படுகிறது  

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கோவையில் இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரிபேட்டை மற்றும் ஜிஎம் நகரில் உள்ள இரண்டு பேரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது. இதேபோல் நாகை மாவட்டம் நாகூரிலும் ஏடிஎம் என்ற தனியார் காலனியில் உள்ள முகமது அஜ்மல் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top