ஐரோப்பிய எம்.பி.க்கள் காஷ்மீர் செல்ல அனுமதித்தது கண்டிக்கத்தக்கது – மாயாவதி

 

ஜம்மு காஷ்மீருக்கு செல்ல இந்திய எம்.பி.க்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களுக்கு அனுமதி அளிப்பதா? என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 எம்.பி.க்கள் அடங்கிய குழு நேற்று இந்தியா வந்தது.  டெல்லி வந்த குழுவினர் நேற்று காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, பிரதமர் மோடி ஒப்புதலின் படி இந்த குழுவினர் இன்று ஜம்மு-காஷ்மீர் சென்று ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய எம்.பி.க்கள் காஷ்மீர் செல்வதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதற்கிடையே, இன்று காலை ஐரோப்பிய யூனியனை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் இன்று ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தனர்.இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு செல்ல இந்திய எம்.பி.க்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களுக்கு அனுமதி அளிப்பதா? என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு காஷ்மீரில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் இந்திய எம்.பி.க்களுக்கு அனுமதி அளித்திருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்

இந்திய எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதா என குற்றம் சாட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், ஜம்மு காஷ்மீருக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் வரவேற்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் இந்திய எம்.பி.க்களுக்கு  அனுமதி மறுக்கப்படுவதில் ஏதோ தவறு இருக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், காஸ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு மாயாவதி  ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top