இந்திய ராணுவ தளபதி பொறுப்பில்லாமல் பேசி போரை தூண்டுகிறார்- பாக்.ராணுவம் குற்றச்சாட்டு

அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள் ,தொண்டர்கள்  வாய்ச்சவுடால் விடுவது வழக்கமானதுதான்.ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் அதுவும் உயர் பதவியில் இருப்பவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது வழக்கமாகி வருகிறது,இப்போது அது அண்டை நாடு நம்மை கண்டிக்கும் அளவிற்கு போய்விட்டது.

பொறுப்பற்ற கருத்துக்களால் இந்திய ராணுவ தளபதி போரை தூண்டுகிறார் என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும், ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை சீர்குலைக்க பாக்.பயங்கரவாதிகள் முயற்சிப்பதாகவும் கடுமையாக பாகிஸ்தானை விமர்சித்து இருந்தார். 

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காஃபூர் கூறியிருப்பதாவது:- இந்திய ராணுவ தளபதி தொடர்ந்து பொறுப்பற்ற கருத்துக்களை கூறி வருகிறார். 

இந்தியா முன்மொழிந்துள்ள முப்படை தளபதி (Chief of Defence Staff) பதவிக்கு அடிபோடும் நோக்கில், அவர் இவ்வாறு  பேசி வருகிறார்.  இந்திய ராணுவ தளபதியின் பேச்சு போரை தூண்டும் வகையிலும், பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது” என்றார். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top