மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்;வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது இடத்தை பிடித்தது நோட்டா

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் லத்தூர் தொகுதியில் வெளியான வாக்கு எண்ணிக்கையில் சிவசேனாவை விட அதிகமாக வாக்குகள் பெற்று நோட்டா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது.

சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரமுடியவில்லை ஆகையால் பாஜக  – சிவசேனா கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது.இதில் சிவசேனா 50;50 பேரம் பேசுகிறது

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் லத்தூர் தொகுதியில் வெளியான வாக்கு எண்ணிக்கையில் சிவசேனாவை விட அதிகமாக வாக்குகள் பெற்ற நோட்டா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

லத்தூர் தொகுதியில் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் தீரஜ் தேஷமுக் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவருக்கு அடுத்தபடியாக, நோட்டா 27 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சிவசேனா கட்சி சார்பில் சச்சின் தேஷ்முக் 13 ஆயிரத்து 524 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது நோட்டா என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top