அரபிக் கடலில் ‘கியார்’ அதிதீவிர புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், மேலும் வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

,அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 முதல் 26 மணி நேரத்திற்குள் இந்த புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலின் மையப்பகுதியில் தற்போது காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டராக உள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 145 கிலோ மீட்டராகவும் நாளை காலையில் மணிக்கு 200 கிலோ மீட்டராகவும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலால் மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும் இந்தியாவில் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 5 நாட்களில் ‘கியார்’ புயல் மேற்கு-வடமேற்கு திசைகளில் ஓமன் நாட்டை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top