திருச்சியில் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த குழந்தை; 15 மணிநேரத்திற்கு மேலாகியும் தொடரும் மீட்பு பணிகள்

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் 15 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் நடந்து வருகின்றன.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன்  சுர்ஜித் வில்சன் (வயது 2).  வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 27 அடியிலிருந்து  70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் 15 மணிநேரத்திற்கு மேலாக தீவிரமுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.

ஆழ்துறை கிணற்றிற்குள் மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை சிறுவனை மீட்க போராடி வருகின்றன என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நேற்று 70, 80 அடியில் இருந்தாலும் குழந்தை மூச்சுவிடும் சத்தம் கேட்டது.  ஆனால், காலை 5.30 மணிக்கு பிறகு, குழந்தை மூச்சுவிடுவதை கண்டறிய முடியவில்லை. உடல் நிலையையும் கணிக்க முடியவில்லை

தற்போதைய நிலை மிக மோசமாக இருக்கிறது.  15 மணிநேரத்திற்கு மேலாக போரடிக்கொண்டிருக்கிறார்கள் என்ன செய்ய? இது போன்ற ஆபத்தான குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை தரக்கூடிய விசயங்களிலிருந்து உடனடியாக காப்பற்ற எந்தவிதமான அடிப்படை கருவிகள் ஏதும் இல்லாமல் இருக்கிறோம்.ஆழ்துழை கிணறுகள் குழந்தைகளுக்குதான் பெரிய ஆபத்தை தருகிறது இது குறித்து ‘அறம்’என்கிற சினிமா படம் வந்து நமக்கு விழிப்புணர்வு தந்தும் இந்த அரசு இன்னும்  விழிப்படையாமல் இருக்கிறது ஆழ்துழை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற ஆணை இருக்கிறது.அந்த ஊர் கிராம அதிகாரி இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்.இந்த ஆழ்துழை கிணற்றை மூடாமல் இருந்ததற்கு அவர் மீது வழக்கு பாயுமா? மக்கள் மீது கரிசனம் இல்லாத அரசு இந்த மக்களின் கண்ணீரில் மூழ்கி விடும்!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top