பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை துஷ்யந்த் சவுதாலா பேட்டி

பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அரியானாவில் கிங்மேக்கராக உருவெடுத்துள்ள துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

மக்களவைக்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் ஹரியாணாவில் பாஜக மொத்தமுள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றியது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 58 சதவீத வாக்குகள் கிடைத்தன. இப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 36.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜகவுக்கு 22 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது.

காங்கிரஸின் வாக்குவங்கியும் மக்களவைத் தேர்தலைவிட சிறிதளவு குறைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 28.42 சதவீத வாக்குகள் பெற்றது. ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. இப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய அளவில் வாக்கு சதவீதம் குறைந்து 28.2 சதவீதம் பெற்றுள்ளது.

பாஜக ஓட்டு சதவிகிதத்தில் குறைவானாலும் 40 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வென்று உள்ளது .துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜன்நாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளை பிடித்து, மூன்றாவது பெரும் கட்சியாக உள்ளது. சுயேட்சைகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலத்தில் யார் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக துஷ்யந்த் சவுதாலா பார்க்கப்படுகிறார். இதேபோல் 7 சுயேட்சைகளின் பங்கும் முக்கியமானது.  ஜன்நாயக் ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமா?, காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமா? என்பது உறுதியாகத் தெரியாத நிலையில்

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,  பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார். மேலும், ஆதரவு கேட்டு பாஜகவினர் யாரும் தன்னை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே, 7 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top