நாங்குநேரியில் தொகுதிக்குள் நுழைய முயன்ற எம்.பி. வசந்தகுமாரிடம் போலீஸ் விசாரணை

நாங்குநேரி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. நாங்குநேரியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த வசந்தகுமார் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யானதாலும், விக்கிரவாண்டியில் எம்.எல்.ஏ., ராதாமணி இயற்கை எய்தியதாலும் இந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது.

நாங்குநேரியில் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் ரெட்டியார் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் வாக்களித்தார்.

பிற்பகல் மூன்று மணியளவில் 52.22% வாக்குப்பதிவாகியுள்ளது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 6 மணிக்கு முன்னால் வாக்குச்சாவடிக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கலுங்கடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளே நுழைய முயன்ற கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை விசாரணைக்காக நாங்குநேரி காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top