சென்னை மற்றும் புறநகர்,கடலோரப் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு வெதர்மேன் கன்னியாகுமரியில் பாரிய மழை மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.இன்னும் மழை தொடரும் என்கிறார்  

இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழை  பெய்யும்

ராமந்தபுரம், டெல்டா, கடலூர் மற்றும் சென்னை அருகே உள்ள  கடலோரப் பகுதிகளுக்கு அதிக மழை பெய்யும்.

எனவே, கடற்கரையெங்கும் சென்னை முதல் தூத்துக்குடி கடற்கரை வரை பகல்முழுதும்  மழையைப் பார்க்கலாம் என்கிறார்  

இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்போது தமிழகத்தில் மேலும் அதிகமான மழை பெய்யும். தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திரா வரை பரவி உள்ளதால் விட்டு, விட்டு மழை பெய்கிறது. இந்த மழை இன்னும்  சில நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும். நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்க‌க்கடல் மற்றும் குமரி கடல்  பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாகர்கோவிலில் 8 செ.மீ., தூத்துக்குடியில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ., ஊட்டி, குன்னூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் தாம்பரத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 6 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top