பாஜக கொண்டு வந்த நீட் தேர்வில் பாஸ்! எம்.பி.பி.எஸ். தேர்வில் காப்பி; 41 மருத்துவ மாணவர்களின் தேர்வு ரத்து

 

மத்தியில் ஆளும் பாஜக நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை, எளிய, நல்ல படிக்கிற மாணவர்களின் டாக்டர் கனவை நசுக்கியது.இந்த நீட் தேர்வினால் நல்ல படிக்கிற அதிகமான மதிப்பெண் வாங்கிய ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த அனிதா என்கிற மாணவியை இழந்தோம்.இப்போது அந்த நீட் தேர்வில் கூட ஆள் மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் டாக்டராகி விடுகிறார்கள்    

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படித்த சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் 41 பேர் மொத்தமாக காப்பி அடித்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு தேர்வு மைய கண்காணிப்பு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளது சி.சி.டி.வி. மேமரா மூலம் தெரிய வந்துள்ளது.


கடந்த ஆகஸ்டு மாதம் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வினை சென்னையை அடுத்துள்ள 2 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 41 பேர் காப்பி அடித்து எழுதி உள்ளனர்.

மிகப்பெரிய அளவில் தேர்வில் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மாற்றம், விடைகளை சொல்லி எழுதுதல், விடை குறிப்புகள் மாற்றம் செய்தல் போன்றவை தேர்வு மையத்திலேயே நடந்துள்ளதை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கண்டு பிடித்தது.

இதனையொட்டி அந்த 2 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 41 மாணவர்கள் எழுதிய தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காபி அடித்து பிடிபட்ட அந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள.

ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு 2 ஆண்டுகள் தேர்வு நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 2 மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள தேர்வு மையத்தையும் அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்து இந்த நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் கூறுகையில், “தேர்வு ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் கல்வியாண்டின் முடிவுகள் பல்கலை கழக வெப்சைட்டில் பொதுமக்கள் பயனுக்காக வெளியிடப்படுகிறது” என்றார்.

இது குறித்து பல்கலைகழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள 2-ம் ஆண்டு மாணவர்கள் 25 பேரும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவரும், இறுதியாண்டு மாணவர்கள் 15 பேரும் ஆகஸ்டு மாதத்தில் வெவ்வேறு நாட்களில் நடந்த தேர்வினை எழுதியுள்ளனர். தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பல்கலைக்கழகத்திற்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் தேர்வு ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் அந்த கல்லூரியில் சோதனை நடத்தினர்.

3 மணி நேரம் நடந்த தேர்வினை பதிவு செய்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மிக எளிதாக தேர்வு மையத்தில் துண்டு பிட்டு, புத்தகம் மற்றும் விடைத்தாள் மாற்றம் செய்வது தெரிந்தது.

மற்றொரு மருத்துவ கல்லூரியில் தேர்வு கண்காணிப்பாளரே இந்த முறைகேட்டிற்கு உதவி செய்தது தெரிந்தது. பல்கலை கழக தேர்வு விதிமுறைக்கு மாறாக இந்த செயல்கள் அமைந்திருந்தன” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top