இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது – நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து

2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி ஆவார்.  மற்ற இருவர் எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆவர்.  “உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக” இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் அபிஜித் பானர்ஜி மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஆவார்.  அவருக்கு இந்திய தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில்,இந்திய பொருளாதாரம் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட பொழுது , இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளதாக, நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.


பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு செய்தி சேனல், அமெரிக்காவில் உள்ள அபிஜித் பானர்ஜியிடம் பேட்டி கண்டது. அப்போது, இந்திய பொருளாதாரம் குறித்து அவர் கூறியதாவது:-


இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது.

கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் சில வளர்ச்சியை கண்டோம். ஆனால், இப்போது அந்த உறுதிப்பாடும் போய்விட்டது.

எனக்கு இவ்வளவு சீக்கிரம் நோபல் பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக வறுமை ஒழிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top