ராமநாதபுரத்தில் கடல்நீர் உள்வாங்கியது; மீனவர்கள் அதிர்ச்சி

ராமநாதபுரத்தில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியது மீனவர்கள் அதிர்ச்சி. ராமநாதபுரத்தில் உப்பூர் பகுதியில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியுள்ளது.  இதேபோன்று ராமேஸ்வரத்தில் சங்குமால் கடற்பகுதியிலும் கடல்நீர் உள்வாங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் கடந்த ஜூனில் பல அடி தூரம் கடல் உள்வாங்கியது.  இதன்பின் அன்று பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பியது.  இதனால் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் சேவை அன்று பகுதியளவு பாதிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், 4 மாதங்களுக்கு பின் அங்கு மீண்டும் கடல்நீர் உள் வாங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியில் இன்று காலை கடல்நீர் 100 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியது. கடல்நீர் உள்வாங்கியது தொடர்பாக பல்வேறு அச்சமூட்டும் செய்திகள் வெளியான நிலையில் இது வழக்கமானதே எனக் சிலர் கூறுகின்றனர்

இது குறித்து மீனவர்கள் கூறும்போது, “வழக்கமாகவே ஆடி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை ராமநாதபுரத்தில் கடல் உள்வாங்கும் சம்பவம் இயல்பாகவே அவ்வப்போது நடைபெறும்”.என்கின்றனர்

இன்றும் அப்படித்தான் நடந்திருக்கிறது. கீச்சாங்காற்று வீசும்போது இப்படி நடைபெறுவது வழக்கம். வழக்கமாக நடப்பதுபோலவே இன்றும் சுமார் 100 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியுள்ளது.

இது மதியம் 3 மணிக்குப் பின்னால் இயல்புநிலைக்குத் திரும்பத்தொடங்கும். இரவுக்குள் சாதாரண நிலைக்கு கடல் திரும்பும்.

மீனவர்கள் இதனால் எந்த அச்சத்துக்கும் உள்ளாகவில்லை என்றும் உப்பூரில் மட்டுமே கடல் உள்வாங்கியுள்ளது என்கின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top