ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழா- முதன்மை விருந்தினராக எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் பங்கேற்பு

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் -Rashtriya Swayamsevak Sangh, [ஆர் எஸ் எஸ்] இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது.

இவர்களுடைய வெகுஜன அமைப்புதான்  இன்று நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கும்  பாரதிய ஜனதா பார்ட்டி. ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தையே பாஜக நடைமுறைப்படுத்தும் அரசியல் அமைப்பு. இந்தியாவின் தந்தை காந்தி விசயத்தில் மட்டும் பாஜக தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக பாவனை செய்து கொள்ளும்.

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி மற்றும் தசராவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகின்றனர். இந்த விழாக்களில் நிகழ்த்தப்படும் உரை உன்னிப்பாக கவனிக்கப்படும்.

அவ்வகையில் இந்த ஆண்டு விஜயதசமி விழா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு பேரணியை அவர் பார்வையிட்டார்.

விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top