தமிழகத்தில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு: ஒரு பெண் உள்பட 8 திபெத்தியர்கள் கைது

சீன அதிபர் வருகையின் போது போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த ஒரு பெண் உள்பட 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சீன அதிபர் சென்னை வருகையின் போது போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக வந்த தகவலை அடுத்து ஒரு பெண் உள்பட 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள திபெத் நாட்டினர் குறித்து போலீசார் கணக்கெடுப்பு நடத்தி கண்காணித்தனர். இந்நிலையில் கிழக்கு தாம்பரத்தில் திபெத் கொடியுடன், சீன அதிபர் வருகை எதிர்ப்பு வாசகங்கள் எழுதுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த 2 மாணவர்கள், ஒரு பெண் உட்பட 8 திபெத்தியர்களை பிடித்து விசாரித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் 8 பேரையும் ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி திவ்யா தயானந்த் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். 18-ந் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

16 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து   தலாய் லாமாக்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை  ஏற்று வந்திருக்கிறார்கள்

17 ஆம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழி தலைநகரான லாசாவை இருப்பிடமாக கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவராக, மதம் மற்றும் நிர்வாக பணி செய்துவந்தார்கள்.

19 ம் நூற்றாண்டில் பிரித்தானிய படைகள்  திபெத்தில் உள்புகுந்து, திபெத்தின் படைவீரர்களை  வீழ்த்தி, 1904 இல் லாசாவை கைப்பற்றியது. இந்த படையெடுப்பு, பிரித்தானியாவுக்கும் திபெத்துக்கும் ஓர் அமைதி உடன்பாடு ஏற்பாட்டுக்கு வழி செய்தது., இந்த தொலைதூர மலைநாடு ஒரு தனிநாடு என்பதற்கு, பிரித்தானிய –திபெத்திய இந்த உடன்பாடே ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்கள் கொள்கிறார்கள்

இந்த படையெடுப்பால் சீனப் பேரரசு கொதிதெழுந்தாலும், அதை நிறுத்த ஒன்றும் செய்ய வில்லை.ஆனால், திபெத்தின் மேல் தனது கோரிக்கையை காக்கும் வண்ணம், பிரிட்டனுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.இது திபெத்தியர்களுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது.சூழ்ச்சியாக திபெத்தை கைப்பற்ற நினைக்கும்  சீனாவை திபெத்தியர்கள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள்

திபெத் 1911 இல் சீனாவிடம் இருந்து விடுதலை அறிவிப்பு செய்தது. 1914 இல் கூட்டிய சிம்லா மாநாடு, யாங்ட்சி (Yangtze) ஆறும், இமயமும் திபெத்தின் எல்லைகளாக முடிவு செய்யப்பட்டது

1949-1950களில், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்திய உடன் மக்கள் தலைவராக  அறியப்பட்ட மாவோ  , மக்கள் விடுதலை படை கொண்டு,திபெத்தை விடுவிக்க ஆணை இட்டார். திபெத்தின் பல பிரபுக்களும், பாட்டாளிகளும் சீன அரசுக்கு ஒத்துழைத்தனர். என்றாலும் நில சீர்திருத்தங்களாலும், மற்றும் புத்த மதம் தொடர்பாகவும் சண்டைகள் தோன்றின. திபெத்தின் தனி நாடு கோரிக்கை  முடிவு பெறாமல் 1959 இல் தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார் அகதிகளாக வந்த திபெத்தியர்களுக்கு இந்தியா பல சலுகைகள் கொடுத்து அரவணைத்தது

எந்த சூழலிலும் திபெத்தியர்கள் சீனா வோடு சமரசம் செய்யாமல் போராடி வருகிறார்கள், இந்தியாவும் அவர்களுக்கு துணை நின்றது

தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிநாட்டு கொள்கையில் பல மாற்றங்கள் செய்தும் மரபு ரீதியான சில விசயங்களை கைவிட்டும் நடந்துகொள்வதால் இந்திய வெளிநாட்டு கொள்கை சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது

இந்த சூழலில் சீனாவின் அதிபர் இந்திய பிரதமர்  சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது இந்த சந்தர்ப்பத்தை திபெத்தியர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய பயன்படுத்தி போராட்ட ஏதும் நடத்திவிடக் கூடாது என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top