சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிட தடை

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரத்திலுள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட  சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி இல்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top