நமது விமானத்தை நமது ஏவுகணையே தவறுதலாக தாக்கிவிட்டது – இந்திய விமானப்படை தளபதி ஒப்புதல்

பாகிஸ்தான் விமானப்படையினருடன் நடந்த சண்டையின் போது எதிர்பாராத விதமாக நமது ராணுவ ஹெலிகாப்டரை நமது ஏவுகணையே தவறுதலாக தாக்கிவிட்டதாக விமானப்படை தளபதி பக்தாரியா தெரிவித்தார் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை பாலக்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்தது.

இந்த தாக்குதலுக்கு பழிதீர்க்கும் விதமாக மறுநாள் காலை (பிப்ரவரி 27) பாகிஸ்தான் விமானப்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து, இந்திய விமானப்படையினருக்கும் பாகிஸ்தான் விமானப்படைக்கும் இடையே காஷ்மீர் எல்லைப்பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

இந்த சண்டையின் போது, காஷ்மீரின் பட்ஹம் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் தரையில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவந்தது. 

இந்நிலையில், இந்திய விமானப்படை தலைவர் பக்தாரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் நமது ஏவுகணைகளால் தான் தவறுதலாக வீழ்த்தப்பட்டது. இது மிகப்பெரிய தவறு. ஹெலிகாப்டரில் இருந்து விமானதளத்துடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டிய நடைமுறை அணைத்து வைக்கப்பட்டிருந்ததும், தளத்தில் இருந்த அதிகாரிகளுக்கும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்களுக்கும் இடையே இருந்த தொலைதொடர்பு இடைவெளி காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக 2 அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிச்சயம் விமானப்படையில் நடைபெறாது. மேலும், இந்திய விமானப்படை எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. ரபேல் போர் விமானங்கள் மற்றும் எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு கவண்கள் வருங்காலங்களில் விமானப்படைக்கு கூடுதல் வலிமையை சேர்க்கும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த தாக்குதல் பற்றி அப்போது விமர்சித்தவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வெகுஜன மக்களிடம் தேசத் துரோகியாக பிரச்சாரம் செய்தது ஆளும் பாஜக அரசு.இப்போது  இந்திய விமானப்படை தலைவர் பக்தாரியாவே உண்மையை  சொல்லிவிட்டார்,அப்படியானால் இவர் மீது தேசத்துரோக வழக்கு பாயுமா ?


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top