உயர்நீதிமன்றங்கள் அரசு பிரதிநிதியாய் செயல்படுவது நாட்டுக்கு நல்லதல்ல

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் –

கெடுப்பார் இலானும் கெடும்

என்பது திருக்குறள். அரசுக்கு தக்க நேரத்தில் இடித்துப் புத்தி சொல்லுபவர்களைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத, ஏமரா -பாதுகாவலற்ற, மன்னன். கெடுப்பார் இல்லாமலே கெட்டுவிடுவான். அதாவது பகையே இல்லாவிட்டாலும் புத்தி சொல்ல ஆள் இல்லாமல் போனால் தானே கெட்டழிந்து போவான் என்பதுதான் பொருள்

இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு சரியாக பொருந்துகிறது

சமீபத்தில் இந்திய ஒன்றியத்தின் மிக முக்கிய ஆளுமைகள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள் அதில் “வடமாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது அதை தடுத்து நிறுத்துங்கள். சகிப்பு தன்மையற்ற இந்த செயல் இந்தியாவிற்கு உலக நாடுகள்  மத்தியில் கெட்டபெயர் வாங்கித்தரும்” என்று அறிவுரை சொல்லி எழுதி இருந்தார்கள்

இப்படி மோடிக்கு அறிவுரை சொல்வது தேச குற்றம் என்று பீகார் உயர்நீதிமன்றம் அறிவுரை சொன்ன 49 அறிவுஜீவிகள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து விட்டது.வழக்கு பதிவு செய்தது சரி என்று பாஜக மந்திரிகள் பேசுவது நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

இது ஒரு செய்தியாக இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் நடக்கும்  மும்பையின் பசுமை பகுதியான ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய புதிய மனுவையும் பம்பாய் ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து இருக்கிறது என்பது இன்னொரு செய்தி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, மரங்களை வெட்டும் பணி நேற்று நள்ளிரவே துவங்கியது.

இதற்காக மரம் வெட்டும் இயந்திரங்கள், புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு மரங்கள் வெட்டும் பணியில் நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றும் போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டியுள்ளதால் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என சில பசுமை ஆர்வலர்கள் சார்பில் பம்பாய் ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய ஐகோர்ட் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

உயர்நீதி மன்றங்கள் அரசுக்கு அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கவேண்டும் மாறாக அரசு பிரதிநிதியாக செயல்படுவது நாட்டுக்கும் நீதிக்கும் நல்லதல்ல


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top