திரிபுராவில் கோவில்களில் ஆடு வெட்ட தடை; இந்திய அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி ஐகோர்ட்டு உத்தரவு!

இந்திய ஒன்றிய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி திரிபுரா மாநிலம் முழுவதும் கோவில்களில் ஆடு வெட்டுவதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திரிபுரா மாநிலத்தில் உள்ள மாதா திரிபுரேஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள சக்தி மடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு பலியிடப்படுவது வழக்கம். இதற்கான நிதியை மாநில அரசு அளித்து வருகிறது.இது இந்திய ஒன்றிய அரசுடன் திரிபுரா மாநிலம் இணையும் போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று

உயிர் பலி இடுவது தொடர்பாக வழக்கு திரிபுரா ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பளித்த ஐகோர்ட்டு மாநிலம் முழுவதும் கோவில்களில் ஆடு வெட்டுவதற்கு தடை விதித்தது. இதனால் திரிபுரேஸ்வரி கோவிலில் ஆடு பலியிட அரசாங்கம் வழங்கும் நிதியும் நிறுத்தப்பட உள்ளது.இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறதுமுன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தது. ‘சுதந்திரத்துக்கு முன்னர் மகாராஜாவின் ஆட்சியில் இருந்து இக்கோவிலில் ஆடு பலியிடும் நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், வீட்டு விலங்கு தியாகம் என்பது வழிபாட்டின் ஒரு அங்கமாக இருப்பதால் அது இன்னும் தொடர்வதற்காகவும், அதை நிறுத்த முடியாது’ என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும் இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மாநில அரசு மேற்கோள் காட்டியது.வக்கீல் சுபாஷ் பட்டாச்சார்ஜி என்பவர் இது தொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பக்ரீத் பண்டிகையின்போது முஸ்லிம் சமூகத்தினர் விலங்குகளை பலியிடுவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மனு இந்து உணர்வை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், பொது ஒழுங்கை சீர் குலைக்கும் நோக்கில் அரசியல் ரீதியாக, இந்து விரோத சக்திகளால் இந்த மனு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்து தலைமை நீதிபதி சஞ்சய்கரோல் மற்றும் நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 72 பக்க தீர்ப்பை அளித்தனர்.

அதில் ‘மற்ற கோவில்களைப் போல திரிபுரேஸ்வரி கோவிலின் வழக்கமான நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் பங்கு குறைவாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆட்டை பலியிட கோவிலுக்கு நிதி உதவி அளிக்கிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25(2)(ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி அரசாங்க பணம் மதச்சார்பற்ற நடவடிக்கைகளின் எல்லைக்குள் வராது.


சமுதாயத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான அனைத்து தவறான நடைமுறைகளையும் ஒழிப்பதன் மூலம் மாற்றங்களைக் கொண்டு வருவது அரசின் கடமை ஆகும். இத்தகைய நடைமுறைகளில் பங்கேற்பதற்கு பதிலாக, கோவில்களில் விலங்குகளை படுகொலை செய்வதை தடை செய்யும் சட்டத்தை அரசு இயக்க வேண்டும். இது பொது ஒழுங்கு, அறநெறி மற்றும் ஆரோக்கியத்துக்கு எதிராக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தின் மக்கள்  தனியான பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் போன்றவற்றை கடைபிடிப்பவர்கள்.அவர்களுக்கென்று தனி வரலாறு உண்டு இந்திய ஒன்றியத்தோடு பின்னால்தான் சேர்ந்தார்கள் 

கிர் பிர் பிக்ரம் கிஷோர் டெபர்மன் 1947 இல் இறந்த பிறகு,  கிரிட் பிக்ரம் கிஷோர் டெப் பர்மனின் தாயார் ராணி காஞ்சன் பிரவா தேவியின் தலைமையில் நிர்வாகத்தை நடத்துவதற்காக ஒரு கவுன்சில் உருவாக்கப்பட்டது.

கிங் பிர் பிக்ரம் கிஷோர் டெபர்மனின் இயற்கைக்கு மாறான மறைவுக்குப் பின்னர் சில மாதங்களுக்குள், திரிபுரா ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொண்டது, உள் மற்றும் வெளி சக்திகளின் அச்சுறுத்தல்களுடன். ரீஜென்சி கவுன்சிலின் தலைவராக ராணி காஞ்சன் பிரவா தேவி, இந்திய ஒன்றியத்தில் சேர விருப்பம் தெரிவிக்க கடும் அழுத்தத்திற்கு உள்ளானார். இந்திய அரசின் ஆலோசனையின் பேரில், அவர் ரீஜென்சி கவுன்சிலைக் கலைத்து, ஜனவரி 12, 1948 இல் ஒரே ரீஜண்ட் ஆனார். ஒரு வருடம் கழித்து, செப்டம்பர் 9, 1949 இல், அவர் ‘திரிபுரா இணைப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டார், மேலும் 15 முதல் நடைமுறைக்கு வந்தது அக்டோபர் 1949 திரிபுரா இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக மாறியது. அதன்பிறகு தலைமை ஆணையரால் ‘சி’ வகை மாநிலமாக நிர்வகிக்கப்பட்டது.

திரிபுரா மாநிலம்  பண்டைய சுதேச மாநிலங்களில் ஒன்றாகும். திரிபுராவை 184 திரிபுரி மன்னர்கள் இறையாண்மை மற்றும் சுயாதீன அந்தஸ்துடன் தொடர்ந்து ஆட்சி செய்து வந்து இருக்கிறார்கள் . 1949 ஆம் ஆண்டில்தான் பல நெருக்கடிகளுக்கு இடையில்  இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் தங்களது கலாச்சாரம், சடங்கு மற்றும் இன்னபிற நடவடிக்கைகளில் இந்திய ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்று திரிபுரா மக்கள் தங்களது பண்பாட்டை காப்பாற்றும் விதத்தில் அந்த ஒப்பந்தம் இருந்தது,இப்போது அந்த ஒப்பந்தம்தான் மீறப்பட்டிருக்கிறது .எப்படி காஸ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதோ அது போன்று திரிபுராவிலும் இந்திய ஒன்றிய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அந்த மக்களின் சடங்கு மற்றும் கலாச்சார முறைகள் நீக்கப்பட்டிருக்கிறது   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top