ஐ.நா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியது சீனா; பாதுகாப்பு கவுன்சில் தலையிட வற்புறுத்தல்!

காஸ்மீர் பிரச்சனை பற்றி இந்திய ஊடகங்கள் சரியான தகவலை கொடுப்பதில்லை அல்லது தடுக்கப்படுகிறது என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது

காஸ்மீர் பிரச்சனை சர்வதேச பிரச்சனையாகி விட்டது அதற்கு காரணம் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கை முடிவே! இந்திய ஒன்றியத்தின் நலனை விட பாஜகவின் தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ் ஸின் கொள்கையை மட்டும் வலியுத்த பாஜக முயற்சிப்பதால் காஸ்மீர் பிரச்சனையை சர்வேதேச பிரச்சனையாகிவிட்டது என்று  சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோடியிடம் நான் மூன்றாவது நபராக இருந்து காஸ்மீர் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் என்கிறார்,பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் ஐநா அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறார், ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியாவை காஸ்மீர் விசயத்தில் எச்சரித்து இருக்கிறது. இந்த அமளிக்கிடையே சீனா ஐநா பொதுக்குழுவில் காஸ்மீர் பிரச்சனையை கொண்டுவந்து விட்டது அதுவும் மோடி ஐநாவில் இருக்கையிலே பேசியிருக்கிறது  

சீனா ஐ.நா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சினையை  அமைதியாகவும் முறையாகவும் தீர்க்கப்பட வேண்டும் என கூறி உள்ளது. இது இந்தியாவிற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது

ஐ.நா பொதுக்குழுவில்  காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனா, ஐ.நா. சாசனம், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி  இந்த விவகாரம் அமைதியாகவும் முறையாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி ஐ.நா பொதுசபையில் நேற்று  உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

“காஷ்மீர் பிரச்சினை கடந்த காலத்திலிருந்து இருந்து வரும் சர்ச்சை. ஐ.நா. சாசனம் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி அமைதியாகவும், முறையாகவும்  தீர்க்கப்பட வேண்டும்.

ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின்  சர்ச்சை திறம்பட கையாளப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையிலான உறவில் ஸ்திரத்தன்மை மீட்கப்படும் என  சீனா நம்புகிறது என கூறினார்.

காஸ்மீர் பிரச்சனை ஏற்கனவே நேரு காலத்திலிருந்து ஐநா மன்றத்தில் இருப்பதால் அதையெல்லாம் ஞாபகப்படுத்தி பேசி இருக்கிறது சீனா.இனி காஸ்மீர் பிரச்சனையை வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் பண்ண முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top