அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை – சமஸ்கிருத திணிப்பு; மு.க.ஸ்டாலின் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் [பகவத் கீதை] சமஸ்கிருதத் திணிப்பு முயற்சி நடைபெறுகிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின்  சிஇஜி கேம்பசில் 2019-ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய – மேல்நாட்டு தத்துவப் படிப்பு” என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 

கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் – திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித் துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும் என பதிவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top