தந்தை பெரியார்-அறிஞர் அண்ணா பிறந்த நாளை கொண்டாட துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஊரில் அனுமதி மறுப்பு!

பெரியகுளம் உட்கோட்டம், தென்கரை காவல் நிலையம் தந்தை பெரியார் பிறந்த நாளையும், அறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தையும் கொண்டாட அனுமதி மறுத்து விட்டது, .மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது  

தமிழர்கள் தமிழகம் முழுவதும் தந்தை பெரியார் 141வது பிறந்த தினத்தையும் அறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாடிவருகிறார்கள்  

இந்நிலையில், துணைமுதல்வர் சொந்த ஊரில் தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாட அனுமதி மறுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தேனீ மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை பொது நூலக வாசகர் வட்டம் உள்ளது.அதன் தலைவராக மு அன்பரசு என்பவர் இருந்து வருகிறார்.

சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும் பாடுபட்ட தலைவர்களான தந்தை பெரியார் மற்றும்  அறிஞர் அண்ணா பிறந்த நாளை மக்களுக்கு நல்ல செய்தி சொல்லும் விதமாக தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற இரா விஜய ராஜ் ஆசிரியருக்கு பாராட்டு விழாவும் குழந்தைகளுக்காக பேச்சுப் போட்டியும் நடத்த திட்டமிட்டு இருந்தார் வாசகர் வட்ட தலைவர் மு அன்பரசு.  

பெரியகுளம், தென்கரை கிளை நூலக வளாகத்தில் விழாவிற்கான ஏற்பாட்டை செய்து வருகிற நிலையில், பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாளை கொண்டாடினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்று காவல்நிலையம் அனுமது தர மறுத்து இருக்கிறது.

மற்றும், காவல்துறையினர் அனுமதி மறுப்பு கடிதத்தில் இந்த தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடினால் அங்குள்ள மற்ற மக்களின் [ இந்துக்களின் ] மனம் புண்படும் என்று கூறியுள்ளார். ஒரு துணை முதல்வர் ஊரில் பெரியார் விழாவை கொண்டாட முடிய வில்லை என்றால் தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது? சமீபத்தில் துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத் எம்.பி நாமெல்லாம் இந்துக்கள்,நமது கலாச்சாரம் இந்து கலாச்சாரம் என்று பேசியதற்கு பிறகுதான் இவ்வாறு நடக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top