அயோத்தி விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்து-முஸ்லிம் அமைப்புகள் முன்வந்துள்ளதாக மத்தியஸ்தர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வுகாண சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த அவகாசத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது.


இந்நிலையில், மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண சன்னி வக்பு வாரியம் ,நிர்வானி அக்ஹாரா மற்றும் இந்து அமைப்புகள் ஆகியவை முன்வந்துள்ளதாக மத்தியஸ்தர்கள் தரப்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை தினமும் விசாரித்துவரும் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் சமரச பேச்ச்சுவார்த்தைக்கு மற்றொருபுறம் அனுமதி அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top