சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் – மைக் பாம்பியோ கண்டனம்

உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய பதப்படுத்தும் வசதி  கொண்ட சவுதி அரேபியாவின் எண்ணெய் தொழிற்துறையின் மையத்தில் இரண்டு ஆலைகள் மீதான தாக்குதல்களுக்கு ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பு ஏற்று இருக்கிறதாக தகவல் வருகிறது

சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

.சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்தகரிப்பு ஆலையின் மீது நேற்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.

இதேபோல், குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெட்ரோல் கிணற்றின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து, பின்னர் அணைக்கப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்நிலையில், சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதேபோல், சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்று குவைத் உள்ளிட்டவையும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் உலக எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் உடனடியாக பாரசீக வளைகுடாவில் பதட்டங்களை அதிகரித்தன, முக்கிய கேள்விகள் பதிலளிக்கப்படாத நிலையில் உள்ளன  ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டன, மற்றும் ஹவுத்திகள் சவுதி பிரதேசத்திலிருந்து  500 மைல் தொலைவில் உள்ள ஏமன் மண்ணிலிருந்து எவ்வாறு தாக்க முடிந்தது? என்கிற கேள்விகள் அப்படியே உள்ளன!

“யேமனில் இருந்து தாக்குதல்கள் வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வலியுறுத்தினார்.    

சவூதி  இளவரசர் முகமது பின் சல்மானுடனான தொலைபேசி அழைப்பில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த தாக்குதலைக் கண்டித்தும் “சவுதி அரேபியாவின் தற்காப்புக்கு” ஆதரவளிப்பதாக கூறினார்  என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் கூறியது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top