தொடரும் தொழிலதிபர்கள் மரணம்; டொயோட்டா கார் ஷோரூம் உரிமையாளர் ரீட்டா தற்கொலை

கார் விற்பனை சரிந்ததால் பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் தொழில் அதிபர் ரீட்டா தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

பெண் தொழில் அதிபர் ரீட்டா (50) லான்சன் டொயோட்டா குரூப் ஷோரும் நிறுவனத்தின்  நிர்வாக  இணை இயக்குனராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில்  இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ரீட்டாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
நாடு முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக கார் விற்பனை சரிந்துள்ளது. லான்சன் குழுமத்தின் விற்பனையிலும் 7 சதவிகிதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளதாக ரீட்டாவின் கணவர் லங்கா லிங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். விற்பனை சரிவு காரணமாக ரீட்டாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.


இதனால் விற்பனை சரிவினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ரீட்டா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி இரவோடு இரவாக அறிவித்த டிமோனிடேசண் ,ஜீ.எஸ்.டி க்கு பிறகு  இந்தியாவின் சிறுகுறு தொழிலதிபர்கள் லட்சக்கனக்கானோர் தங்கள் தொழிலை நிறுத்தி தெருவிற்கு வந்து விட்டார்கள்,கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியப் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. இது குறித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்தவிதமான கவலையும் கொள்ளாமல் காஸ்மீர் பிரச்சனை ,சிதம்பரம் கைது என்று மக்கள் கவனத்தை திசை திருப்பி தங்களது இயலாமையை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லாத நிலையே இந்தியாவில் தொடருகிறது.ஆங்காங்கே மாநிலக்கட்சிகள் எதிர்கட்சியாக செயல்பட வேண்டியதிருக்கிறது.மாநில கட்சிகளையும் வருமான வரித் துறையினரை வைத்து ரைட் விட்டு, சோதனை என்ற பெயரில் துன்புறுத்துவது என குறைந்த பட்சமுள்ள ஜனநாயக வெளியையும்  அடைத்துக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு

இந்நிலையில், காபி டே அதிபர் தற்கொலையை தொடர்ந்து பெண் தொழில் அதிபர் ரீட்டா (50) லான்சன் தற்கொலையும் இந்தியாவின் தொழில்துறையின் நிலையை நன்கு விளக்குகிறதுகருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top