பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.


காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன்பே  காஷ்மீரில் மக்களை முழுவதும் இந்திய இராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது மட்டுமில்லாமல், காஸ்மீர் அரசியல் வாதிகளை வீட்டுக்காவலில் வைத்து இதுவரை அவர்களை வெளியே விடாமல் துன்புறுத்துகிறது இந்திய அரசு.உலக நாடுகள் காஸ்மீர் விசயத்தை கவனமாக கவனித்துக்கொண்டு இருக்கிறது

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை யாரும் சந்திக்கவிடாமல் தனிமைச்சிறையிலே வைத்திருக்கிறது இந்திய அரசு

இன்றளவும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முழுவதுமாக திரும்பவில்லை. இயல்பு நிலை சீரடைந்து விட்டதாக சில  பகுதிகளை இராணுவம் குறிப்பிட்டு சொல்கிறது ஆனால், அங்கு பத்திரிக்கையாளர்களை மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அனுமதிப்பதில்லை

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், “சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அண்ணா மாநாட்டுக்காக பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என கூறியுள்ளார். 

இந்திய அரசின் அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கிற கருத்து சுதந்திரம்,ஜனநாயக உரிமை எல்லாம் பறிக்கப்பட்டு மிகவும் மோசமான சூழலில் நாடு இருக்கிறது.பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு,பாஜக ஆதரவு பத்திரிகை மட்டுமே செயல்பட்டு வருகிறது .காஸ்மீர்  பற்றி பேசினாலே கைது செய்ய அரசும், காவல் துறையும் கங்கணம் கட்டி வருகிறது.இந்த நிலையில் உச்சநீதிமன்றம் வாய் மூடி அமைதியாக இருப்பது மேலும் மக்களை பயமுற செய்கிறது. இந்த நிலையில் மதிமுக தலைவர், மக்களவை உறுப்பினர் வைகோ அவர்கள் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி  உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது பெரும் ஆறுதலை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top