மேற்கு வங்காளத்தில் மத்திய அரசின் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் : மம்தா அறிவிப்பு!

பொதுமக்களுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைகளை மத்திய அரசு பல மசோதாக்களின் மூலம் பறித்து விட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு எதிராக இருக்கும்  மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டம், சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்தி பொதுமக்களுக்கு பெரிய இன்னலை கொடுக்கிறது. இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த அபராத உயர்வுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தைரியமாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ”திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என எங்கள் மாநிலத்தின் அரசு அதிகாரிகள் கருதுவதால் இதை இங்கு அமல்படுத்தமாட்டோம்.” என தெரிவித்தார்.

திருத்தியமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என பலத்த எதிர்ப்புக்கு பிறகு  மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி இன்று அறிவித்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top