அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஜான் பால்டன். ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது இவர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தார். அந்த நாடுகளுடன் அமெரிக்கா போர் புரிய வேண்டும் என்ற கொள்கையை அடிக்கடி தெரிவித்தார். 

ஆனால் பால்டனின் வெளியுறவுக் கொள்கைகள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பிடிக்கவில்லை. இதனால்பால்டனுக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.  

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில் தெரிவித்து இருப்பது ,”நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார். இதுவரை பால்டன் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவுக்கான புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும்”. இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top