சென்னையில் 13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; சென்னை குடிநீர் வாரியம்

சென்னையில் இந்த வருடம்  கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு நிலத்தடி நீர் வற்றிப்போனதுதான் காரணம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டி வளர்ச்சி திட்டம் என்கிற போர்வையில் நாட்டை காடாக்கி விட்டதும் ஒரு காரணம். கடந்த 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது மழை நீரையும் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரையும் தடுத்து, மக்களுக்கு பயன்படும் வகையில் குளங்களில் நிரப்பி இருந்தால் நிலத்தடி நீர் பெருகி  இருக்கும் சென்னை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து இருப்பார்கள். ஆனால், நடந்தது என்ன? வெள்ளமாக வந்த எல்லா நீரும் கடலில் கலந்து விரயமாகின சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அதன்பிறகு, 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் தொடர்ந்து சென்னை வறட்சியை தான் சந்தித்தது. அதிலும் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போனதால் சென்னை கடும் வறட்சியை எதிர்கொண்டது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் தண்ணீர் தட்டுப்பாடு சென்னையின் சில பகுதிகளில் ஆரம்பிக்கும்.ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. இதில் ஒட்டுமொத்த சென்னையும் பாதிப்புக்குள்ளானது.

ஏரிகள் வறண்ட நிலையில், நிலத்தடி நீர் ஓரளவு கைக்கொடுக்கும் என்று எதிர்பார்த்த சென்னை வாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்கு சென்றது.


இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து லாரி தண்ணீரை நம்பியே சென்னைவாசிகள் காலத்தை தள்ளினர். ஒரு கட்டத்தில் அந்த தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவியது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் சென்னை குடிநீர் வாரியம் லாரிகள் மூலம் தெரு, தெருவாக தண்ணீர் சப்ளை செய்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்களும் குடத்தை தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலர் சென்னையை விட்டு காலி செய்து தண்ணீருக்காக புறநகர் பகுதிகளை நோக்கி படையெடுத்தனர். இதற்கு ஒரே தீர்வு மழை மட்டும் தான் என்று பொதுமக்கள் பேசினர். மரங்களை எல்லாம் வெட்டி விட்டு  மழைக்காக சிறப்பு யாகங்கள், பிரார்த்தனைகளையும் இந்த அதிமுக அரசு செய்தது வேடிக்கையாக இருந்தது.  2015-ம் ஆண்டு மழையை வெறுத்த சென்னைவாசிகள், மழைக்காக ஏங்க தொடங்கினர்.

தென்மேற்கு பருவமழை சீசன் வந்தது, இந்த காலத்தில் பெருமளவு மழை தமிழகத்துக்கு இருக்காது என்றாலும், வெப்பசலனத்தால் அவ்வப்போது மழை இருக்கும். அந்தவகையில், சென்னையில் கடந்த ஜூலை மாதத்தின் இறுதியில் இருந்து மழை சென்னையை அரவணைக்க தொடங்கியது.


இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் சென்னை மக்களுக்கு மழை வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் கடந்த ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது, ஓரளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக சென்னை குடிநீர் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகள் இருக்கின்றன. இதில், மாதவரம், திரு.வி.க.நகர் மண்டல பகுதிகளை தவிர மற்ற 13 மண்டலங்களில் கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர்ந்து இருக்கிறது. அதிகபட்சமாக பெருங்குடியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகம் உயர்ந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ரோடு போடவும்,சாமியார்களுக்கு கோவில் கட்டவும் மரங்களை வெட்ட அனுமதி அளித்துவிட்டு இப்பொது நாம் மழைக்காக கண்ணீர் வடிக்கிறோம் அப்போதே மக்கள் இதை எதிர்த்து போராடியிருந்தால் ஓரளவாவது மரங்கள் வெட்டப்படுவதை, காடுகள் அழிக்கப்படுவதை தடுத்திருக்கலாம்  
கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top