காஷ்மீர் விவகாரம்: சீன ராணுவ மூத்த அதிகாரியுடன் பாக். ராணுவ தளபதி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் துணைத் தலைவர் சூ கிலியாங் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் முயன்று வருகிறது  

இந்த சூழலில்,  பாகிஸ்தான் சென்றுள்ள சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் துணைத் தலைவர் சூ கிலியாங் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பாகிஸ்தான் ராணுவ தலைவர் காமர் ஜாவித் பாஜ்வா உடன் தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்தும் இருவரும் பேசியதாக தெரிகிறது. காஷ்மீர் விவகாரத்தை புரிந்துகொண்டதற்காகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் சீனாவுக்கு பாஜ்வா நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் திறனை மேம்படுத்துவது ஆகியவை குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு தினங்களுக்கு முன் மோடி அமெரிக்க அதிபருடன் கலந்து ஆலோசனை பெற்றதும்,காஸ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட ஆர்வம் உள்ளதாகவும் செய்திகள் வந்த நிலையில் பாகிஸ்தானின் சீனா ஒப்பந்தம் கவனிக்கத்தக்கது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top