“காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்” ராகுல்காந்தி ‘ட்விட்’க்கு பின் உள்ள அரசியல்!

“ஜம்மு காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம் என்றும், அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்” இப்படி திடிரென்று ராகுல்காந்தி ட்விட் செய்ய காரணமென்ன? அதற்கு பின்னால் இருக்கிற அரசியல் என்ன? 

ஜம்மு காஷ்மீர் விவகாரம் முற்றிலும் வேறு திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.பத்திரிகைகள் உண்மையான செய்திகளை மக்களிடம் தெரிவிக்கிற நிலையில் இல்லை.பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது.வெளிநாடுகளில் இருந்து வரும் பத்திரிகை செய்திகள் காஸ்மீர் விவகாரம் பற்றி வேறு ஒரு பிம்பத்தை கொடுக்கிறது.உதாரணத்திற்கு ‘வாசிங்டன்போஸ்ட்’ இதை மேற்குலகம் தலையிட வேண்டும் என்கிறது

இந்திய பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு சென்று ஒவ்வொரு தலைவர்களையும் பார்த்து வருவதும் அவர்களோடு காஸ்மீர் விவகாரமாக பேசிவருவதும் தெரிந்ததே! இரு நாடுகளுக்கான பிரச்சனையாக இருந்த காஸ்மீர் விவகாரம் இப்போது உலக நாடுகள் கவனிக்கத் தக்க பிரச்சனையாக மாற்றி விட்டார் மோடி

மோடி ட்ரம்ப் பேச்சு வார்த்தை அதை நிருபிப்பது போல இருக்கிறது.இந்த சூழலில் திடீரென்று நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  

“ஜம்மு காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம் என்றும், அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்” 

Rahul Gandhi

✔@RahulGandhi

 · 3h

I disagree with this Govt. on many issues. But, let me make this absolutely clear: Kashmir is India’s internal issue & there is no room for Pakistan or any other foreign country to interfere in it.

Rahul Gandhi

✔@RahulGandhi

There is violence in Jammu & Kashmir. There is violence because it is instigated and supported by Pakistan which is known to be the prime supporter of terrorism across the world.

20.8K

9:10 AM – Aug 28, 2019itter Ads info and privac



ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  “ இந்த அரசுடன் பல விஷயங்களில் வேறுபடுகிறேன். ஆனால்,  இந்த விவகாரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்கிறேன். காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். காஷ்மீர் பிரச்சினையில், பாகிஸ்தான் உள்பட எந்த ஒரு அந்நிய நாடும் தலையிட இடம் இல்லை”. என்று

.இது ,காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ராகுல்காந்தி பதிவு அமைந்துள்ளதாக தெரிகிறது என்று அரசியல் கட்சிகள் சொன்னாலும்,உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. இன்னும், அதிகமாக மோடி அமெரிக்காவோடு நெருக்கம் காண்பிப்பதை தடுக்கவும் இது போன்ற ட்விட்கள் உதவும் என்று ராகுல் நினைக்கிறார்.

நாளை காஸ்மீர் விசயத்தில் மூன்றாவதாக ஏதாவதொரு நாடு மூக்கை நுழைத்தால் நான் அப்போதே சொன்னேன் இது இந்தியாவின் உள்விவகாரம் என்று, பாஜகவும் மோடியும்தான் மூன்றாவது நாடு தலையிடக் காரணமானவர்கள் என்று தனது அரசியல் எதிர்காலத்திற்கு புதிய களத்தை உருவாக்கலாம். ராகுலின் ட்விட் காஸ்மீரை காப்பாற்றுகிறதோ இல்லையோ அவரது அரசியலை காப்பாற்றும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top