ஜம்மு காஷ்மீருக்கு சீதாராம் யெச்சூரி செல்லலாம் ஆனால் அரசியல் பேசக்கூடாது! சுப்ரீம் கோர்ட்

ஜம்மு காஷ்மீர் செல்ல சீதாராம் யெச்சூரிக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.ஆனால் அரசியல் பேசக் கூடாது என்று சொல்லியிருக்கிறது

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு செல்ல முயன்ற அரசியல் தலைவர்களுக்கு சமீபத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகளின் குழு ஒன்று சென்றது. அந்த குழுவை காஸ்மீருக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது பாஜக அரசு  

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். அப்போது, அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

இது உலக அளவில் பேசப்பட்ட செய்தியாக மாறியது.உண்மையில் காஸ்மீரில் என்ன நடக்கிறது காஸ்மீரில் உள்ள கட்சி மற்றும் இயக்க தலைவர்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற கேள்வி எழும்பியது

இந்த சூழலில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரும்  சிபிஐ (எம்) கட்சியைச் சேர்ந்தவருமான  முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூசுப் தரிகாமியை சந்திக்க அனுமதி கோரி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி அளித்துள்ளது. எனினும், சீதாராம் யெச்சூரி தனது காஷ்மீர் பயணத்தை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும், அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதிகாரிகள் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகளின் குழு சென்றதையும் தடுத்து நிறுத்திவிட்டு இப்போது சிபிஐ (எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு உள்ளே செல்லலாம் ஆனால், அரசியல் பேசக்கூடாது என்றால் எந்த தர்க்கத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது? அடிப்படை ஜனநாயகம் காஸ்மீரில் மீறப்படுகிறது என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டியதிருக்கிறது.மக்கள் சுப்ரீம் கோர்ட்டைத்தான் நீதி கிடைக்கப்பெற்ற கடைசி புகலிடமாக நினைக்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் அந்த நம்பிக்கையை காப்பாற்றுமா?


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top