காஸ்மீர் விவகாரத்தை திசை திருப்ப பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியாதிட்டம்:இம்ரான்கான்

 

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் விவாதிக்க வேண்டுமேன சீனாவின் உதவியுடன் முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தானின் முயற்சி அமெரிக்கா உட்பட பல நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயற்சிப்பதாக தெரிகிறது

இந்நிலையில், பாகிஸ்தான் மக்களுக்கு தொலைக்காட்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கியதன் மூலம் இந்திய பிரதமர் மோடி வரலாற்றுப்பிழையை செய்துவிட்டார். இந்த விவகாரத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றதன் மூலம் பாகிஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

காஷ்மீரில் விவகாரத்தில் இந்தியா தனது அனைத்து துருப்புச்சீட்டுகளையும் பயன்படுத்திவிட்டது. அவர்களிடம் இனி பயன்படுத்த எந்தவித துருப்புச்சீட்டுகளும் இல்லை.

இனிமேல் பாகிஸ்தான் தனது துருப்புச்சீட்டுகளை பயன்படுத்தி இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக உறுதியான மற்றும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும். மேலும், அடுத்தமாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் காஷ்மீர் மக்களின் பிரதிநிதியாக நான் செயல்படுவேன்.

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப பாலக்கோட் சம்பவம் போன்ற மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.என்று அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top