வேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு

சாதியவாதிகளாலும் மதத் தீவிரவாதிகளாலும் சமீப காலமாக நாகை மாவட்டம் குறிவைத்து தாக்கப்படுகிறது.இப்படிதான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு  கோயம்புத்தூர் சின்னா பின்னமாக ஆக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த, தற்சார்ப்பு கொண்ட மாவட்டமான கோயம்புத்தூர் இன்று மதத் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது. அது போல நாகை மாவட்டத்தையும் மாற்றி விடுவார்களோ என்று அச்சம் எழுகிறது  

கடந்த மாதம் . நாகை மாவட்டத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிடுவது போன்ற  படத்தை பதிவிட்ட ஒருவரை வீடு தேடிச்சென்று மதத்தீவிரவாதிகள் தாக்கினர். அடுத்து வேளாங்கன்னி கோயிலுக்கு சென்றவர்களை வழி மறித்து தாக்கினர்.தமிழக அரசு வேளாங்கன்னி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் என்ற  அறிவிப்பு.கொடுத்ததே தவிர தாக்கியவர்களை கைது செய்து தண்டிக்கவில்லை

இந்த காயங்கள் இன்னும் ஆறவில்லை அதற்குள்,  தற்போது அண்ணல் அம்பேத்கர் சிலையை வன்மமாக உடைத்து சாதி கலவரத்தை உண்டு பண்ண முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் சாதியவாதிகளும் மதவாதிகளும்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக வெடித்தது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. வன்முறையின்போது வீசப்பட்ட ஏராளமான கற்கள், வாகனத்தின் நொறுங்கிய கண்ணாடிகள் சிதறிக் கிடந்ததால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் தாக்குதலை தடுக்க முடியவில்லை.  இந்த சம்பவத்தால், வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக 12 மணி நேரத்திற்குள் புதிய சிலை நிறுவப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

உடைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலை திட்டமிட்டு உடைக்கப்பட்டதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பே ஆறு. சரவணத்தேவர் என்பவர் இந்த பகுதியில் போக்குவரத்துக்கும் கோவில் தேர் ஊர்வலம் செல்லவும் அம்பேத்கர் சிலை இடைஞ்சலாக இருக்கிறது ஆகையால், அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து பேசுவதோடு நில்லாமல் உயர் போலிஸ் அதிகாரிகளுக்கும் மனுவும் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டிருப்பது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அல்ல திட்டமிடப்பட்டு நடந்த செயலாக தெரிகிறது.

இது போன்று சாதிக்கலவரத்தை உருவாக்குபவர்கள் எங்கிருந்து கிளம்புகிறார்கள் என்று அரசுக்கு நன்றாக தெரிந்தும் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். சாதாரண மக்கள் பிரச்சனைக்கு போராடுபவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு இதுபோன்ற சாதியவாதிகளையும் மதவாதிகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பது மறைமுகமாக மதத் தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது! என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top