கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் பெசன்ட் நகர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளிலும்  கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியது. இதைக்காண மக்கள் ஆர்வமுடன் கடற்கரை பகுதிகளுக்கு வந்து குவிந்தனர்.

இது குறித்து அறிந்த தேசிய கடல் ஆராய்ச்சி மைய அறிவியலாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடல் ஏன் நீலநிறமாகியது என்பதற்கு காரணத்தை கண்டு பிடித்தனர்.

இது குறித்து கடல் ஆராய்ச்சியாளர்கள்  ‘நோக்டிலுகா சைன்ட்டில்லன்ஸ் (Noctiluca Scintillans) எனப்படும் இந்த நுண்ணுயிரிகள், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் போது ஒளியுமிழும் தன்மை உடையவைகளாக மாறிவிடும். இவைகள்தான் கடல் நீல நிறமாக மாறுவதற்கு காரணம். கடந்த  இரண்டு நாள்களில் ஒளியுமிழும் நுண்ணுயிரிகள் கடற்பரப்பில் அதிகரித்து கடல் நீலநிறமாக காரணமாகிவிட்டது என்று கடல் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்

பொதுவாக பயோலுமினசென்ஸ் ஆர்கானிசம் (bioluminescence Organism) எனப்படும் ஒளியுமிழும் உயிரினங்களால் கடற்பரப்பில் நிற மாற்றங்கள் நிகழ்வது இந்த உலகம் முழுவதுமே இயல்பான ஒன்றுதான் என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர். ஆய்வு தொடர்ந்து நடந்து வருவதாகவும், கடலில் நச்சுத் தன்மை அதிகரித்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

நீலநிறமாக கடல் மாறிய அன்று ஈஞ்சம்பாக்கம் முதல் திருவான்மியூர் வரையும் பின்னர் எலியட்ஸ் கடற்கரை முதல் பெசன்ட்நகர் கடற்கரை வரை நுண்ணுயிர்கள் நகர்ந்ததது என்றும் வை 240 மைக்ரோ மீட்டர் முதல் 300 மைக்ரோ மீட்டர் வரை வளர்ந்தது என்றும் அறிஞர்கள் கூறினர்.

சமீபத்திய மழை காரணமாக கடல் உப்புத்தன்மை குறைந்தது மற்றும் கடலில் கலக்கும் கழிவு நீரில் சில மூலக்கூறுகளால் ஒளியுமிழும் இந்த நுண்ணுயிரிகள் வளர்வதற்கான சத்துக்கள் கிடைத்திருப்பதை அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய வேதிப் பொருட்களின் தன்மை அதிகரித்துள்ளது என்றும் கடல் நீரில் கழிவுகளும் நைட்ரஜன் சார்ந்த நச்சுச் சத்துகளும் அதிகரிக்கும் போது நச்சு கடற்பூண்டுகள் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்கள்.

கடந்த ஆண்டு வட சென்னை அருகே கடலில் எண்ணெய் கொட்டியது. அதை சுத்தப்படுத்த தமிழக அரசு உடனே முயற்சி செய்யாததால் அப்பகுதி மக்கள்  தாமாக முன் வந்து கையால் வெறும் டப்பாவை வைத்து சுத்தப்படுத்தியது நினைவிருக்கும் கடல் மாசு அடைவது மீன்வளத்தின் வீழ்ச்சிக்கு அறிகுறி  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top