
நீட் தேர்வை கொண்டுவந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்த மத்திய பாஜக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலை நீக்கி விட்டு ‘தேசிய மருத்துவ ஆணைய சட்டம்’ கொண்டு வந்து மருத்துவர்களுக்கும் மருத்துவம் படிக்க விரும்புவர்களுக்கும் பெரிய சிக்கலை கொண்டு வந்து இருக்கிறது.இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது வேலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் முழுமையான சம்பளத்தை வழங்காமல் ஏமாற்றி வருகிறது
இந்நிலையில் ,சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.
அரசு டாக்டர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி முதல்
வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதன் ஒருகட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.
தங்கள் போராட்டம் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
கடுமையான நீட் தேர்வை தாண்டி மருத்துவ துறையில் நுழைவது சவாலான விசயம். இந்தநிலையில் ஒரு பக்கம் டாக்டர்கள் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு டாக்டர்களின் சம்பளம் மிகவும் குறைவு.எனவே அரசு உடனடியாக அரசு ஆணை எண்.354-ஐ மறுஆய்வு செய்து முழுமையான சம்பளம் கிடைக்க உத்தரவிடவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.