அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினர். அதாவது, 26-ம் தேதி (திங்கட்கிழமை) வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். 

ஐ.என்.எக்ஸ். தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமலாக்கத்துறை வழக்கில் வரும் ஆக.26 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சிபிஐ தொடர்ந்த வழக்கில் மட்டும் ப.சிதம்பரம் காவலில் எடுக்கப்பட்டு  விசாரிக்கப்படுகிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top