தென்மேற்கு பருவமழை பொழிகிறது! குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு!!

தென்மேற்கு பருவ மழை சிறப்பாக பெய்து வருவதால் கேரளம், கர்நாடகம்,தமிழ் நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் ஆகிய இடங்களில் பெரும் மழை பெய்து வருகிறது.அப்பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகள் முழுதும் நிரம்பி வழிகிறது   

நேற்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது . இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை தடை விதித்திருந்தது .

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் மாதத்தில் சீசன் தொடங்கும் . இந்த வருடம் ஜூன் 10 ம் தேதி தொடங்கிய சீசன் இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது . அதன் பிறகு மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது .

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது . நேற்று காலையில் இருந்தே குற்றாலத்தில் சீசன் நன்றாக இருந்தது . மதியம் 2 மணியளவில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது .

நேரம் செல்ல செல்ல நீர்வரத்து அதிகரித்து கொண்டே சென்றது . மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது . தண்ணீர் பழுப்பு நிறத்தில் இருந்ததால் அந்த பகுதியை தெரியாத அளவுக்கு இருந்தது . இதில் குளிப்பது ஆபத்து என்பதால் நேற்று முழுவதும் அனைத்து அருவிகளில் குளிப்பதற்கும் தடை விதிக்கப் பட்டிருந்தது .

ஆர்ப்பரித்து விழும் தண்ணீரின் அழகை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் கூடினர் . இந்த ஆண்டின் உட்சபட்ச வெள்ளமாக இது இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறினர் . அருவிகளில் நீர்வரத்து குறைந்த நிலையில் இன்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top